Sunday, December 27, 2009

Carnatic Music Jokes - 2

1. பாடகர் கோவிலில் நன்றாக பாடிக்கொண்டு இருந்தார்... ரசிகர்களும் நன்றாக கேட்டனர்... இப்படியாக மூன்று மணி நேரம் ஆனது... மக்கள் வீட்டுக்கு கிளம்பினர். ஒருவர் மட்டும் பொறுமையாக அமர்ந்து கச்சேரி கேட்டார்... கடைசி வரை கிளம்ப முயற்சி செய்யவே இல்லை.


பாடகர் அவரை பார்த்து, என்ன அய்யா, கச்சேரி நன்றாக இருந்ததா என்று கேட்டார்... அவரும் ஆமாம் என்று சொன்னார்... உங்கள் பொறுமைக்கு நன்றி என்று பாடகர் சொன்னார்... அப்போது பதில் வந்தது... அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் பாடிய மேடை ஜமக்க்காலம் என்னுடையது.... அதை எடுத்து போகவே இருந்தேன் !!!!

2. ஒரு கச்சேரி என்பது இரண்டு மணி நேரம், முப்பது நிமிஷம் நடக்கும்.... 2-3 சிறிய பாடல்கள், ராக மாலிகா, தனி ஆவர்தனம், துக்கடாக்கள் என்று பல விதமாக சங்கீதம் நம்மை வருடும்.


ஆனால், கச்சேரி கேட்க வரும் ரசிகர்கள் மெதுவாக கச்சேரியின் நடுவிலே நழுவுவார்கள். கொஞ்சம் பேர் நடுவில், கொஞ்சம் பேர் தனி அவர்தனம் ஆரம்பிக்கும் போது, கொஞ்சம் பேர் துக்கடாக்கள் தொடங்கும் போது...

நித்யஸ்ரீ கண்ணை மூடி ராகம், தளத்துடன் சஞ்சாரித்து கண்ணை திறந்து பார்த்தார்... ரசிகர்களை காணோம்... வடிவேலு ஜோக்கில் வராப்போல...

2 comments:

  1. Brim over I to but I about the post should acquire more info then it has.

    ReplyDelete