நல்ல துணுக்குகள் கர்நாடக சங்கீதம் சீசனை ஒட்டி:
1. ஒரு வித்வான் கச்சேரி செய்ய பக்கவாத்திய கூட்டத்துடன் ஊருக்கு போனார். அவரை உபசரித்து தங்க வைத்து விட்டு, எல்லாம் வசதியா இருக்கிறதா என்று கேட்டார் மண்டபகாரர். வித்வானும் எல்லாம் ஒகே என்று சொன்னார். மண்டபகாரர் விடாமல் ஏனுங்க, அவர் ஏன் போத்திகிட்டு ஓரமா ஒதுங்கி இருக்கார் என்று ஒரு மூலையை காட்டி கேட்டார். அதற்கு வித்வான் சொன்னார், அது தான் தம்புரா !!!
2. ரசிகர் ஒருவர் அரியக்குடியை பார்த்து கேட்டாராம் - பைரவிக்கும், ஆனந்த பைரவிக்கும் என்ன வித்தியாசம் ? அதற்கு பதில் : கரண்டிக்கும், பாதாள கரண்டிக்கும் உள்ள வித்தியாசம் தான் !
3. கோபாலகிருஷ்ணன் ஒரு முறை அரியக்குடி உடன் கச்சேரி செய்து கொண்டு இருந்தார். வயலின் வீச்சு கொஞ்சம் ஆவேசமாக இருந்தது. அதனால் சொன்னாரம், " நீ பாட்டுக்கு வாசிச்சா எப்படி, கொஞ்சம் என் பாட்டுக்கும் வாசி"
4. திருமண வரவேற்பில் மகாராஜா விஸ்வநாத அய்யர் பாடும் போது, பெண்ணின் தகப்பனார் அவரது மகனை மிருதங்கம் வாசிக்க கேட்டாராம். அவரும் சரி என்று சொன்னாரம். கச்சேரி முடிந்தது. அய்யா என் மகன் எப்படி வாசிச்சான்? பதில் : அவன் எங்கே பாட்டுக்கு வாசிச்சான், அவன்பாட்டுக்கு வாசிச்சான் ; அய்யா ஏன் தனி ஆவர்த்தனம் இல்லாமலே கச்சேரி முடித்து விட்டேரே ?, அதக்கு பதில், முழு கச்சேரி தனியா தானே வாசிச்சான்... அதனால் தான் !!!
5. பெண்ணின் தகப்பனார் திருமண வரவேற்பில் பாடிய அரியக்குடிஇடம் சொன்னார் "போன முறைக்கு இந்த முறை உங்கள் கச்சேரி ரொம்ப நன்னா இருந்தது" , பதில் " என் பாட்டு அதே மாதிரி தான் இருக்கு, உங்களுக்கு தான் கொஞ்சம் சங்கீதா ஞானம் வந்திருக்கு"
6. ரவி போகும் போது என்ன பாட்டு பாட வேண்டும்?
Byeரவி
7. காலை எழுந்த உடன் பாட வேண்டிய ராகம் ?
காபி
8. ரவி போன உடன் பாட வேண்டிய ராகம்?
ஆனந்த byeரவி
9. Q: What's the difference between Lalgudi Jayaraman and Mahatma Gandhi?
A: One's a violinist and the other is a non-violinist!
10. Q: What do cricket and Carnatic music have in common?
A: In both, the pitch is important
11. Q: What taaLam does a kangaroo keep?
A: Jhampa
12. Q: What raaga do you need to sing a really, really LONG song?
A: Tilang (the lung)
haha. good ones!
ReplyDelete